There is no end to education. It is not that you read a book, pass an examination, and finish with education. The whole of life, from the moment you are born to the moment you die, is a process of learning.

- Jiddu Krishnamurti


Wednesday, January 25, 2012

பிரமிள் கவிதைகள் - 3

நடைபாதை நழுவிய கவிதை - பிரமிள்

வான்மீகப் புற்றிருந்த 
மருந்தீசுவரச் சந்நிதியில் 
ஞானசம்பந்த 
மோஹினி நாயனாரும்
மாஜி சமண ஹோமோ சாமி
நாவுக்கரசுப் பிக்ஷாடனாரும்
உதிர்த்த திருச் சுக்கிலத்தில்
உதித்தவன் போல்
எடுத்தான் தமிழை
நடைபாதை நழுவி
நடுத்தெருவுக்கு வந்த
குடிகாரன் ஒருவன்.
தொடுத்தான் சமத்துவ
தத்துவங்கள் முழுதையும்
சரித்திர நிஜத்துடன்:
'ஒரே இனம்
ஓர்ர்ரே பொணம்.'

(1986)
கனவு, செப். 1990.








மானுடம் - பிரமிள் 

ஒரு ஜூலை 
ஒன்பது நாள்
சிங்கள வெறியின் 
குதறலில் சிக்கி இ
லங்கையில் அலறிற்று 
தமிழ்ச்சனம்.
அலறலைக் கேட்ட 
உலகத்துக்கு 
இலங்கைத் தமிழ் 
விளங்கவில்லை.
ஆயினும் மானுடம்
ஒரே இனம்.
அலறல் மெஷின்கன் 
உருமலாய் மாறிற்று - 
ஓர்ர்ரே பொணம்!

(1986)

மீறல், அக்டோபர், 1993.


காலண்டர் 


காலத்தைப் பற்றி 
மூர்த்திகள் இரண்டு 
ஆரவாரமாய் 
கருத்துப் பரிமாறிக் கொண்ட 
'காலண்டர் எனக்கெதற்கு?
என்றான் பிச்சு,
'காலண்டர் தானேதற்கு'
என்றான் கிச்சு.


(1986)


கனவு, செப். 1990

0 comments: